தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின்னர் தனது திறமையால் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். 'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் பிஸியான நடிகராக மாறிவிட்டார், சமீபத்தில் இவரது நடிப்பில் 'டான்' மற்றும் 'பிரின்ஸ்' போன்ற படங்கள் வெளியானது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' எனும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் மற்றும் சுனில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.