லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்கு 8.8 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இப்படத்தை சோனி லிவ் தளத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் மம்மூட்டி, ரம்யா சுவி, அசோகன், ரம்யா பாண்டியன், விபின் அட்லீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ராகுல் சதாசிவம் இயக்கத்தில் வெளியான 'பூதகளம்' படத்திற்கு 7.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் காணலாம். இந்த படத்தில் ரேவதி, ஷேன் நிகாம், சஜ்ஜு குரூப், ஜேம்ஸ் இலியா, ஆதிரா படேல் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.